Please specify the group
7:13 pm - Saturday April 27, 2024

Buy Domain!... Get Website Free!... Contact madurai360.in@gmail.com

உலர்ந்த அத்திப்பழத்தை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! / Benefits of soaking dried figs in water



பொதுவான நட்ஸ்கள் மற்றும் உலர்ந்த பழங்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருக்கும். இதனால் இது மிகச்சிறந்த ஸ்நாக்ஸ்களாகவும் கருதப்படுகிறது. இவைகள் மிகவும் சுவையானதாக இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அதிலும் அத்திப்பழத்தின் உலர்ந்த வடிவம், அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடியது. இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது தேன், நீர் போன்றவற்றில் ஊற வைத்தும் சாப்பிடலாம்.

உலர்ந்த அத்திப்பழத்தில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிரம்பியுள்ளதால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருப்பதற்கு இதனை அன்றாடம் உட்கொள்வது மிகச்சிறந்தது. அதிலும் தற்போது நிறைய பேர் அவஸ்தைப்படும் உடல் பருமனைக் குறைக்க, உலர்ந்த அத்திப்பழம் பெரிதும் உதவியாக இருக்கும். அதோடு, இரத்த அழுத்தம், இதய ஆரோக்கியம், இரத்த சர்க்கரை போன்றவற்றையும் சீராகப் பராமரிக்கவும் உதவும். அதற்கு உலர்ந்த அத்திப்பழத்தை நீரில் ஊற வைத்து சாப்பிடுங்கள். இங்கு உலர்ந்த அத்திப்பழத்தை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.


மலச்சிக்கல்

உலர்ந்த அத்திப்பழத்தில் இயற்கையாகவே மலமிளக்கும் பண்புகள் நிறைந்துள்ளதால், இதனை சாப்பிட்டால் மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான பிரச்சனைகளான எரிச்சலூட்டும் குடலியக்க பிரச்சனைகளும் தடுக்கப்படும். அதிலும் ஒரு மாதம் தொடர்ந்து நீரில் ஊற வைத்த 2-3 உலர்ந்த அத்திப்பழத்தை நீரில் ஊற வைத்து சாப்பிட மலச்சிக்கலில் இருந்து நல்ல பலன் கிடைக்கும்


இதய நோய்

நீரில் ஊற வைத்த உலர்ந்த அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் ஈ மற்றும் சி அதிகம் உள்ளதால், இது உடலினுள் சென்றதும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று செயல்பட ஆரம்பிக்கும். மேலும் இது இரத்தத்தை சுத்தம் செய்யும். ஆய்வு ஒன்றில், உலர்ந்த அத்திப்பழம் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று செயல்படுவதால், இது ப்ரீ-ராடிக்கல்களை நீக்கி, இதய நோயின் அபாயத்தில் இருந்து தடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.


வலிமையான எலும்புகள்

உலர்ந்த அத்திப்பழத்தில் பாஸ்பரஸ், வைட்டமின் டி மற்றும் கால்சியம் போன்ற எலும்புகளை வலிமைப்படுத்தும் சத்துக்கள் உள்ளது. அதிலும் ஒருவர் இரவில் படுக்கும் போது நீரில் 2-3 துண்டுகள் அத்திப்பழத்தை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் சாப்பிட்டு வந்தால், எலும்புகள் வலிமையடைந்து, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட இதர பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.


மார்பக புற்றுநோய்

தற்போது பெண்களிடையே மார்பக புற்றுநோயின் தாக்கம் அதிகம் உள்ளது. குறிப்பாக மாதவிடாய் முற்றிலும் நின்றுவிட்ட பெண்கள் தான் மார்பக புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எனவே பெண்கள் நீரில் ஊற வைத்த உலர்ந்த அத்திப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள சத்துக்கள் புற்றுநோயின் வளர்ச்சிக்கு காரணமான காரணிகளைத் தடுக்கும். இதன் விளைவாக புற்றுநோயின் அபாயமும் குறையும்.


எடை குறைவு

உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போர் இரவில் படுக்கும் முன் நீரில் 2-3 உலர்ந்த அத்திப்பழத்தை ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் அத்திப்பழத்தை சாப்பிடுங்கள். இதனால் உடல் பருமன் குறைவதோடு, அடிக்கடி பசி எடுப்பதும் கட்டுப்படுத்தப்பட்டு, எடை அதிகரிக்காமலும் இருக்கும்.


பாலியல் ஆரோக்கியம்

உலர்ந்த அத்திப்பழம் பெண்களின் கருவளம் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை ஊக்குவிக்க உதவும். இதில் உள்ள கனிமச்சத்துக்களான ஜிங்க், மாங்கனீசு, மக்னீசியம் போன்றவை பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே பாலியல் பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள், நீரில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிட, நல்ல பலன் கிடைக்கும்.


உயர் இரத்த அழுத்தம்

நீரில் ஊற வைத்த உலர்ந்த அத்திப்பழத்தில் சோடியம் மிகவும் குறைவு. எனவே இது உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகச்சிறந்த ஸ்நாக்ஸ் எனவும் கூறலாம். அதோடு உலர்ந்த அத்திப்பழம் நரம்புகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, இரத்த அழுத்தத்தை அதிகரிக்காமல் நாள் முழுவதும் அமைதியாக வைத்துக் கொள்ள உதவும்.


தொண்டைப் புண்

தொண்டைப்புண் உள்ளதா? அப்படியானல் உலர்ந்த அத்திப்பழத்தை நீரில் ஊற வைத்து, அந்நீருடன் அத்திப்பழத்தை சாப்பிடுங்கள். இதனால் தொண்டைப் புண் சரியாவதோடு, இதர சுவாச பிரச்சனைகளான நாள்பட்ட இருமல், ஆஸ்துமா போன்றவைகளும் குணமாகும்.


கண் பராமரிப்பு

உலர்ந்த அத்திப்பழத்தில் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தத் தேவையான வைட்டமின் ஏ சத்து ஏராளமான நிரம்பியுள்ளது. ஒருவர் தினமும் நீரில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், அது கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முதுமை காலத்தில் ஏற்படும் பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும் அபாயத்தையும் குறைக்கும்.


சர்க்கரை நோயாளிகள்

சர்க்கரை நோயாளிகளுக்கு உலர்ந்த அத்திப்பழம் மிகச்சிறந்த ஸ்நாக்ஸ் எனலாம். இதில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் ஏராளமாக நிறைந்திருப்பதால், இதனை உட்கொள்ள இன்சுலின் வெளியீட்டின் அளவு நடுநிலைப்படுத்தபடுவதோடு, இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.


இரும்புச்சத்து குறைபாடு

உலர்ந்த அத்திப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து, ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவி, இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகை வரும் அபாயத்தைக் குறைக்கும். ஆகவே இரத்த சோகை உள்ளவர்கள், தினமும் நீரில் ஊற வைத்த உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வர, இயற்கையாக இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.



Filed in: Z More

Comments are closed.